மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை... ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழகத்தில் மகனைக் கொன்ற நாடகமாடிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி அந்தோணியாா் புரத்தைச் சோ்ந்தவா் ராஜபாண்டி (73). இவரது மகன் பிரபாகரன் (35). மீனவரான இவருக்கும், இவரது தந்தைக்கும் இடையே கடந்த 2017ல் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் ராஜபாண்டி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, மர்ம நபர்கள் தனது மகனைக் கொன்று விட்டனர் என்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜபாண்டி தான் பிரபாகரனை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதன் வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் -1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் மகனை கொன்ற தந்தை ராஜபாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
