நாசரேத்தில் ஸ்தோத்திரப் பண்டிகை நிறைவு... ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
நாசரேத்தில் நடந்த திருமண்டல ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவில் ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பேராயர் ஐசக் வரபிரசாத் வழங்கினார்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 22 வது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகையை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் 22 வது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிரதமப்பேராயரின் ஆணையாளரும், பேராயருமான (பொறுப்பு) ஐசக் வரபிரசாத் தலைமை வகித்து அருட்செய்தி கொடுத்தார்.இந்த ஆராதனையில் திரளானோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து பேராலய வளாகத்தில் வருடாந்திர கூட்டம் நடந்தது. திருமண்டல பிரதமப்பேராயரின் ஆணையாளர் ஐசக் வரபிரசாத் தலைமை வகித்தார். கோவில்பட்டி சபை மன்ற தலைவர் சாமுவேல் ஜெபம் செய்தார். சாயர்புரம் போப் சபை மன்ற தலைவர் டேவிட் ராஜ் வரவேற்றார்.திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திருமண்டல நிர்வாக செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல நிர்வாக கமிட்டி உறுப்பினர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஆகியோர் பேசினர்.
திருமண்டல தகவல் தொடர்பு துறை இயக்குநர் பாஸ்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவை முன்னிட்டு 13 பேருக்கு கிரைண்டர், 33 பேருக்கு தையல் இயந்திரம், 7 பேருக்கு ஆடுகள், 15 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு வீடு பழுது பார்த்தல், 7பேருக்கு மருத்துவ செலவு , ஒரு நபருக்கு ஏழை நிதி உதவி மற்றும் திருமண்டலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சார்பில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
