நெகிழ்ச்சி வீடியோ... ஏர்ப்போர்ட்டில் மயங்கியவருக்கு ஓடோடி வந்து முதலுதவி செய்த பெண் மருத்துவர்!

 
மயங்கிய முதியவர்


 
இன்றைய அவசர யுகத்தில் அனைவருக்கும் ஏதேதோ வேலை... ஓடிக்கொண்டே இருக்கிறோம். அருகில் இருப்பவர்களை அக்கறையாய் நலம் விசாரிக்கவோ, பேசிக்கொண்டிருக்கவோ யாருக்கும் பொழுதில்லை. செல்லும் வழியில் ஆபத்துக்கள் விபரீதம்,  நடந்தாலும் உடனே படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ள தான் பார்க்கிறோமே ஒழிய உதவி செய்ய யாருமே மெனக்கெடுவதில்லை. 


விமானநிலையத்தில் மயங்கி விழுந்த ஒருவரை மருத்துவர் முதலுதவி செய்து அவரைக் காப்பாற்றிய செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் ஜூலை17 ம் தேதி நடந்த ஒரு சம்பவம்  வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விமான நிலையத்தின் உணவகத்தில் பெரியவர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.  அக்கம் பக்கத்தினர்  என்ன செய்வது என தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது விமான நிலையத்தில் இருந்து  பெண் மருத்துவர் ஒருவர் ஓடி வந்தார்.

அவர் அந்த பெரியவருக்கு சிபிஆர் முதலுதவி செய்து  உயிரை காப்பாற்றினார். அத்துடன்  பெரியவர் கண் விழிக்கும் வரை அவர் அருகில் இருந்து அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.  உடனடியாக  பெரியவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  மேலும் அந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் பெண் டாக்டருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!