நெகிழ்ச்சி... வடமாநிலத் தொழிலாளியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்காவலர்... !!

 
ஆர்யா

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பீகாரை சேர்ந்த வடமாநில குடும்பம் ஒன்று கூலித்தொழில் செய்து வந்தது.  இவர்களுக்கு13 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன்  4 வயதில் ஒரு மகள் மற்றும் 4 மாத கைக்குழந்தையும் உள்ளது.  இந்த குடும்பத்தின் தலைவரான கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், 4 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணுக்கு இதய கோளாறால்  மூச்சுத்திணறல் ஏற்பட்டு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 
ஆர்யா
அவருடன் 4 குழந்தைகள் இருப்பதை கண்ட மருத்துவர்கள், அவர்களை குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து செல்ல  எர்ணாகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மகளிர் காவல் நிலையத்தில் இருந்து  பெண் காவலர் ஆர்யா ஷைலஜன் உட்பட போலீஸார், மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு ஆதரவின்றி நின்ற 4 குழந்தைகளில், 4 மாத குழந்தை பசியால் கதறித் துடித்தது.   இதில் இருந்த பெண்காவலர் ஆர்யா ஒரு வயது குழந்தையின் தாய். கைக்குழந்தை அழுததை கண்டு மனம் வருந்தினார்.  சிறிதும் யோசிக்காமல், உடனடியாக குழந்தையை தனது மடியில் கிடத்தி அதற்கு பாலூட்டினார்.

போலீஸ்

குழந்தை பசியாறியவுடன், 4 குழந்தைகளையும்  குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து சென்றனர்.   குழந்தைகளின் தாய் உடல்நலம் பெற்று வந்ததும்   நால்வரும், அவரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என  காவல்துறையினர் தெரிவித்தனர் .  இதனிடையே, பெண் காவலர் ஆர்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை  தெரிவித்து வருகின்றனர்.  தாய்மையின் பேரன்புடன் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு  பாலூட்டிய ஆர்யா குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web