இன்று குற்றாலத்தில் மலர்கண்காட்சியுடன் சாரல் திருவிழா தொடங்கியது... வண்ணவிளக்குகளில் ஒளிரும் அருவிகள்!
இன்று காலை மலர் கண்காட்சியுடன் குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது. குற்றாலம் மாவட்ட ஆட்சியர் சாரல் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். இன்று துவங்கிய சாரல் திருவிழா நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. சாரல் திருவிழாவினையொட்டி, குற்றால அருவிகள் வண்ணவிளக்குகளில் ஒளிர்ந்தது பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறையையொட்டி சாரல் திருவிழாவினைக் கண்டு ரசிக்க குவிந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இருந்து அடுத்து வரும் 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குற்றாலத்தில் குவிந்து, அருவிகளில் குளித்து மகிழ்வார்கள்.
இந்த காலங்களில், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் சாரல் திருவிழா அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் வரையில் நடைபெறும் சாரல் திருவிழா இந்த ஆண்டு நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது.

சாரல் திருவிழாவையொட்டி ஐந்தருவின் மேல் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் மலர்கண்காட்சி, காய்கறி மற்றும் வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இன்று காலை குற்றாலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் சாரல் திருவிழாவினைத் துவக்கி வைத்தார்.
குற்றாலத்தில் அருவிக் கரையில் நிறம் மாறும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு அருவிகளில் வெள்ளிக் கம்பியைப் போல விழும் நீர், வண்ணத்தில் ஒளிர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.
சாரல் திருவிழாவின் முதல் நாளான இன்று ஆரோக்கிய குழந்தை போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தொடர்ந்து செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகு போட்டி, ஆணழகன் போட்டி கோலப்போட்டி, மாரத்தான் போட்டி என நான்கு நாட்களும் திருவிழாக்கள்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
