திமுக அரசுக்கான இறுதி கவுன்டவுன் தொடங்கிடுச்சு... இன்னும் 140 நாட்கள் தான் - நயினார் நாகேந்திரன் பேச்சு!
ராஜராஜசோழனின் 1040ம் ஆண்டு சதய விழா விழாக்கள் தஞ்சாவூரில் கடந்த இரண்டு நாட்களாக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை பெருவுடையார் கோயிலில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருமுறை நூல்கள் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏற்றி, ஓதுவாமூர்த்திகள் முன்னிலையில் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜவீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
பின்னர் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 39 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “திமுக அரசு வழங்கிய எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டது. திமுக அரசுக்கான இறுதி கவுன்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் 140 நாட்கள்தான் இந்த அரசுக்கு உள்ளன. இந்த நாட்களில் அவர்கள் எதையும் செய்து காட்ட முடியாது. அடுத்ததாக ஆட்சி மாற்றம் உறுதி; தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி வரப்போகிறது,” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
