பிப்ரவரி 7, 2026ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி !
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1 தேதியை தகுதி நாளாகக் கொண்டு, இந்த திருத்தப் பணிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெறவுள்ளன.

அட்டவணைப்படி, அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை முன்னேற்பாடுகள் மற்றும் அச்சடித்தல் பணிகள் நடைபெறும். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை கணக்கீட்டுப் பணி நடைபெறும். டிசம்பர் 5 முதல் 8 வரை கட்டுப்பாட்டு அட்டவணை மேம்படுத்தப்பட்டு வரைவுப் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் 9 அன்று வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 8 வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறப்படும்.

டிசம்பர் 9 முதல் 2026 ஜனவரி 31 வரை அறிவிப்பு கட்டத்தில் விண்ணப்பங்கள் மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு நடைபெறும். பிப்ரவரி 3க்குள் இறுதி வாக்காளர் பட்டியலுக்கான தர சரிபார்ப்பு முடித்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
