பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிப்பு நிறைவு... பாதுகாப்புத்துறை அமைச்சர் பெருமிதம்!

 
ராஜ்நாத் சிங்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு இன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த ஏவுகணைகள் விரைவில் இந்திய பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட உள்ளன.

சிந்தூர் எல்லை இந்தியா பாகிஸ்தான் இராணுவம்

இந்த முதல் தொகுப்பு பாதுகாப்புப் படைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்

நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், “பிரமோஸ் ஏவுகணை தற்போது இந்திய பாதுகாப்புப் படையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கனவுகளை நனவாக்கும் வலிமையைக் கொண்டது பிரமோஸ். பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளும் இதன் தாக்குதல்திறன் வட்டத்துக்குள் வருகின்றன. ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரைலர் மட்டுமே,” என்று குறிப்பிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?