அக்டோபர் 24ல் வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் !
வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் சின்னம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கடலோர தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் தாக்கமாக, வரும் 19ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 24ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு தாழ்வு பகுதி உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டு கடலோர பகுதிகளை நெருங்கும் நிலையில், புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
