அக்கா மகளின் பாதுகாப்புக்கு அனுப்பிய நண்பன்... இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த கொடூரம்!

தன்னுடைய அக்கா மகளை பாதுகாப்பாக அழைத்து வரச் சொல்லி, நண்பனை அனுப்பி வைத்தவருக்கு பெரும் அதிர்ச்சியை, பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட நண்பனே, இளம்பெண்ணை கதற கதற கற்பழித்து, கொலையும் செய்தது தஞ்சை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், கற்பழித்து கொலைச் செய்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சர்மிளா வந்தார். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து விடுப்பு எடுத்து தச்சங்குறிச்சியில் உள்ள தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், தச்சங்குறிச்சி அருகேயுள்ள நாட்டாணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர். வீட்டில் இருந்த சர்மிளாவின் பாட்டி அவரை திட்டிக் கொண்டிருந்தாராம். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு பிரபுவிடம், ஷர்மிளா கைபேசி மூலம் கூறினார். தன்னால் செல்ல முடியாத நிலையில் இருந்த பிரபு, தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனது நண்பனான ஆறுமுகம் மகன் கருப்புசாமியை (30) அனுப்பி வைத்தார். சர்மிளாவை கருப்பசாமி மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை அழைத்து சென்று கொண்டிருந்தார். இதனிடையே, சர்மிளாவின் கைபேசிக்கு பிரபு தொடர்பு கொண்டபோது, இருவரும் நாட்டாணி அருகே வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.
ஆனால் வெகு நேரமாகியும் நாட்டாணிக்கு வராததால் சந்தேகமடைந்த பிரபு கைப்பேசி மூலம் சர்மிளாவுக்கும், கருப்பசாமிக்கும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் இருவரது கைபேசிகளும் அணைக்கப்பட்டிருந்ததால், அவர்களை பிரபு உள்ளிட்டோர் தேட தொடங்கினர். நள்ளிரவில் நாட்டாணி அருகே சென்னம்பட்டியில் ஷர்மிளா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் காவல் துறையினர் கருப்புசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!