சுடுகாட்டில் நடந்த கலாட்டா கல்யாணம்.. மணமேடையாக மாறிய தகன மேடை! கிராமத்தினர் உற்சாகம்!

 
சுடுகாடு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மொகம்புரா பகுதி நடந்த திருமணம் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. அம்பானி வீட்டு திருமணம் போன்று பெரிய ஆடம்பரமும் கிடையாது. பின்னர் ஏன் இப்படி பிரபலமானது என கேட்டால், திருமணம் நடந்த இடம் அப்படி என்று தான் கூறவேண்டும். ஆம், இளம் பெண் மற்றும் இளைஞருக்கு திருமணம் சுடுகாட்டில் நடந்துள்ளது. அதுவும் உறவினர்கள் முன்னிலையில். 

இந்த திருமணத்தில், அனைத்து சடங்குகளும் ஒரு தகன மைதானத்தில் செய்யப்பட்டது. பிரகாஷ் கவுர் என்ற மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாக சுடுகாடு வளாகத்தில் தனது பேத்தியுடன் வசித்து வருகிறார். சிறுமிக்கு உள்ளூர் பையனுடன் சுடுகாட்டில் திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணும் அவரது பேத்தியும் தங்கள் நேர்மை மற்றும் அன்பான குணத்தால் அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்தனர். 

சுடுகாடு

அந்தப் பெண் தனது பேத்தியுடன் நீண்ட காலமாக சுடுகாட்டில் உள்ள சிறிய வீட்டிலேயே வசித்து வருகிறார். சுடுகாடுகளைப் பற்றி மக்கள் மிகவும் வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டுள்ளனர், அத்தகைய இடத்திற்கு வழக்கமாகச் செல்வதில்லை. இன்று, திருமண ஊர்வலம் சுடுகாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டது முற்றிலும் வேறுபட்டதாக மாறியது.

சுடுகாடு

திருமண பெண்ணின் பாட்டி பிரகாஷ் கவுர் கூறுகையில், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தனது பேத்திக்கு திருமணம் நடந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  ஏற்பாடுகளைச் செய்ததற்காக நன்றி கூறுகிறேன், அவர்களால் எனது பேத்தி திருமணம் செய்து கொண்டாள், என்று அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web