லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை ராஷ்மிகாவுடன் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம்... ஆவேசமான விஜய் தேவரகொண்டா!

 
விஜய் தேவரகொண்டா

நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக நீண்ட காலங்களாக ரசிகர்கள், புகைப்பட, வீடியோ ஆதாரங்களுடன் கூறி வந்த நிலையில், இரண்டு பேருமே இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வந்தனர். ஆனாலும், இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் வெளிநாடுகளுக்கு ஒன்றாகவே சென்று, ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும் புகைப்படங்களைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தனர் டோலிவுட் ரசிகர்கள்.இந்நிலையில், பிப்ரவரி 2வது வாரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் என்பதை மறுத்திருக்கிறார் நடிகர் விஜய்தேவரகொண்டா. 

விஜய் தேவரகொண்டா


நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இந்த படங்களிலும் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்த நிலையில், இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுவும் சேர்ந்து கொண்டது. பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிவது, ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாவது, இருவரது குடும்பமும் ஒன்றாக பண்டிகைகளைக் கொண்டாடியது என இவர்களது காதலை ரசிகர்கள் உறுதிப்படுத்தவும் செய்தார்கள். 
இதுகுறித்து, முதல்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா

அதில், “வருகிற பிப்ரவரி மாதத்தில் நான் யாருடனும் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்ய போவதில்லை. நான் 2 வருடங்களுக்கு ஒரு முறை திருமணம் செய்துகொள்கிறேன் என ஊடகங்கள் நினைக்கின்றன. இது போன்ற வதந்திகள் மூலம் என்ன திருமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றன” என்று பேசியுள்ளார். இதன் மூலம் ராஷ்மிகாவுடன் தனது நிச்சயதார்த்த வதந்திக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web