15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சொந்த தாத்தாவே செய்த கொடூரம்..!
திருவண்ணாமலையை சேர்ந்த, 15 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.தாய், தந்தை இல்லாததால், சிறுமி, தந்தை வழி தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். சிறுமியை அவரது தாத்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் சிறிய தாத்தாவும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன், சிறுமி படிக்கும் பள்ளியில், சைல்டு லைன் மூலம், "நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்" குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த விபரீதத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை நடத்தி அச்சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், போலியர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா முனுசாமி, மைனர் தாத்தா குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க