காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி !! பரபரப்பு வாக்குமூலம்!!

 
ரேணு

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா . இவர்   கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத்தை காதலித்து வந்தார். இதில் ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.  ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த  நிலையில், இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்து   பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்து வந்தனர்.  

பள்ளி காதல்

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்க்கை சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில்  கடந்த சில மாதமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது.   ஜாவத்  இவரை விட்டு மற்றோரு  பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த ரேணுகா அவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.  ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் சராமாரியாக குத்தியுள்ளார். இதனால்  ஜாவத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதன் பிறகு தான்  தவறை உணர்ந்த  ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார்.

மாமனாரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி- மருமகன் வெறிச்செயல்..!!
 அவரது கதறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவே ஓடி வந்த பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், ஜாவத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவத்  உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது காதலனை கத்தியால் குத்தி கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்செயல் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்   ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web