சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகள் கதறி கூச்சல்!

 
விபத்து

 பேருந்து பயணங்களில் சில சமயங்களில் பேருந்து ஓட்டுனர்களிடையே கடும் போட்டி நிலவுவது உண்டு. குறிப்பாக அரசு பேருந்துகளை தனியார் பேருந்து ஓட்டுனர்கள் முந்தி செல்வதில் பெரும் போட்டா போட்டி நடைபெறும். இந்த வகையான போட்டிகள் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு சில நேரங்களில் விறுவிறுப்பாகவும், சில நேரங்களில் அச்சமாகவும் இருக்கும். அந்த வகையில் கேரளாவில்   கோழிக்கோட்டில் இருந்து பாலக்காடு செல்லும்  அரசு பேருந்து,  அதே வழித்தடத்தில் தனியார் பேருந்தும்  சென்று கொண்டிருந்தன.   இரு பேருந்துக்கும் இடையே யார் முந்தி செல்வது என்ற போட்டி ஏற்பட்டுவிட்டது.  

விபத்து

அதன்படி  முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை அரசு பேருந்து முந்தி செல்ல முயற்சித்தது.  ஆனால்  தனியார் பேருந்து ஓட்டுநர்  அரசு பேருந்துக்கு வழி விடவில்லை. இதனால் உருவான கவனக்குறைவால்   கேரளா அரசு பேருந்து ஓட்டுனர்  சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதிவிட்டார். இதனால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில்  அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் சிறுசிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தால்  அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

போலீஸ்
தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விபத்துக்குள்ளான அரசு பேருந்தை  மீட்டனர். சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களை சீர்படுத்தினர்.  இச்சம்பவம் குறித்து பேருந்து பயணிகள் இந்த வழித்தடத்தில் பொதுவாகவே  அரசு பேருந்தும்,  தனியார் பேருந்தும்  யார் முந்தி செல்வது என்பது குறித்த  போட்டி தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்தோடுபயணம் செய்ய வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!