பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட அரசு உத்தரவு... கர்நாடகத்தில் பரபரப்பு!
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகிறனர்.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஸ்டூடியோவை உடனடியாக மூட மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
