பத்திரம் மக்களே... தமிழகத்தில் 2 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்!

 
வெயில்


மழை பெய்தாலும் பிரச்சனை... பொய்த்தாலும் பிரச்சனை என்று புலம்பி வருகிறார்கள் தமிழக மக்கள்.  தென்மாவட்டக்களில்  பெருமழையிலும், வெள்ளத்திலும் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், கோடைக்காலங்கள் துவங்கும் முன்பே தமிழகத்தில் 2 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது. 
நேற்று பரமத்தி வேலூர், ஈரோடு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயில் மழை

வெப்பத்தோடு அனல் காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், இந்த வருட கோடைக்காலங்களில் வழக்கத்தை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஈரோட்டில் நேற்று 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது.

வெயில்

அடுத்த சில நாட்களில் பல மாவட்டங்களில் வெயில் சதத்தைத் தாண்டும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் தேவைஏற்பட்டாலொழிய வீட்டை விட்டு வெளியே வராதீங்க. மதிய நேரத்தில் குழந்தைகளையும், முதியவர்களையும் வெளியே தனியாக அனுப்பாதீங்க. அதிகளவில் நீர்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக்கோங்க. பருத்தியினாலான ஆடைகளை வெயில் காலம் முடியும் வரை அணியும் வழக்கத்தை மேற்கொள்ளுங்க. குழந்தைகளை அதிகளவில் நீர் அருந்த பழக்கப்படுத்துங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web