அதிர்ச்சி வீடியோ... காப்பகத்தில் குழந்தைகள் செருப்பால் தாக்கப்படும் கொடூரம்!!

 
தாக்கப்படும் சிறுமி

குழந்தைகள் காப்பகங்கள் பலவற்றில்  குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவதாக சமீபமாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.  உத்தரப்பிரதேச மாநிலத்தில்  ஆக்ராவில் குழந்தைகள் நலக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில்   கட்டிலில் படுத்திருக்கும் சிறு பெண் குழந்தையை குழந்தைகள் காப்பக பெண் கண்காணிப்பாளர் செருப்பால் பலமுறை அடிக்கிறார். மற்றொரு ஊழியர் எதுவும் நடவாதது போல் அருகில் இருந்து கவனிக்கிறார்.  


தாக்கப்படும் குழந்தை அருகே மற்றொரு குழந்தை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் படுத்திருந்தது. இவர்களுடன் அதே அறையில்  உள்ள 6 குழந்தைகளும் ஒவ்வொருவரும் அவரவர் படுக்கையில் படுத்து இந்தக் காட்சிகளை பயத்துடன் பார்த்துக்கொண்டே உள்ளனர். பதற வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செப்டம்பர்4ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக வீடியோ பதிவாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளன.  பொதுமக்களின் எதிர்ப்பை ஏற்று குற்றம் சாட்டப்பட்ட கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்கப்படும் சிறுமி


செருப்பால் அடிக்கும் இந்தப் பெண் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் அதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கு முன்பு பிரயாக்ராஜில் உள்ள சிறார் காப்பகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிகிறது.  இந்நிலையில், ஆக்ரா மாவட்ட குழந்தைகள் காப்பக தகுதிகாண் அதிகாரி  “குழந்தைகள் இல்லத்திற்கு  நேரில் விசாரிக்க  சென்ற போது தாக்கப்பட்ட சிறுமி மீண்டும் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒளிந்து கொண்டது”எனக் கூறினார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web