பகீர்.. தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விபரீதம்... பெற்ற தாயே குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து குப்பையில் வீசிய கொடூரம்!

 
மிஸ்தி 

இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார். ஆனால் காதலியின் குழந்தையை கூட அழைத்து வர  கள்ளக்காதலன் சம்மதிக்கவில்லை. இதனால், குற்றச் சம்பவங்களின் பின்னணி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிரைம் பாட்ரோல் என்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காஜல் தனது குழந்தையின் கழுத்தை அறுத்து, அப்பகுதியில் உள்ள குப்பையில் சூட்கேஸில் வீசியுள்ளார்.


இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், அப்பகுதியில் சிவப்பு நிற உடை ஒன்று கிடந்ததைக் கண்டனர். அதில் ஒரு குழந்தையின் உடல் இருந்தது.அதன்பிறகு குழந்தை யார் என்பதை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தரையில் ரத்தம் கசிந்து கிடப்பதை கண்டனர். ஆனால் காஜல் அங்கு இல்லாததால், அவரது தந்தைக்கு போன் செய்தபோது, ​​அவரது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மிஸ்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குழந்தை  பலி

அந்த புகாரின் பேரில் காஜலின் செல்போன் சிக்னல் மூலம் போலீசார் அவரை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது காஜல் தனது காதலனுடன் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காஜலை கைது செய்தனர். காதலனுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை