தொடரும் கொடூரங்கள்... தலித் முதியவரின் தலையில் செருப்பு மூட்டை..!!

 
முதியவரின் தலையில் செருப்பு மூட்டை

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில்  வசித்து வருபவர்  தல்சந்த் சால்வி. இவர்  தலித் சமூகத்தை சேர்ந்த முதியவர். இவர்   பாரம்பரிய பகவத் கீதை கதை சொல்லி. சமீபத்தில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டு பகவத் கீதையை விவரித்தார். அதில் சில  சில தவறான வரலாற்று உண்மைகளை விவரித்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து  உள்ளூர் பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்ட அவரது தலையில் செருப்புகள் அடங்கிய மூட்டையை வைத்தனர்.

முதியவரின் தலையில் செருப்பு மூட்டை

அத்துடன் அவரை  ஊரார் முன்னிலையில் மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில்   வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் தலையில் மூட்டையுடன் கைகளை கட்டிக்கொண்டு நிற்கின்றார்.  இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வயதானவர் என்று பாராமால் செருப்பு மூட்டையை வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரின் தலையில் செருப்பு மூட்டை

ராஜஸ்தானில் இந்த ஆண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இந்நிகழ்வுக்கு விளக்கம் அளிக்கும் படியும், நீதி வழங்குபடியும் ஆளும் காங்கிரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.  மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web