முதல்வன் படப் பாணியில் “சார்ஜ் சீட் மெமோ!!” அமைச்சரின் திடீர் விசிட்டால் திணறிய மருத்துவமனை!!

 
மா.சுப்பிரமணியன்

முதல்வன் படப் பாணியில் நேரத்திற்கு பணிக்கு வராதவர்களுக்கு சார்ஜ் ஷீட் வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது மருத்துவர்கள் பணியில் இல்லாததை கண்டறிந்தார். பணியில் இல்லாத மருத்துவர்களுக்கு உடனடியாக ‘சார்ஜ் மெமோ’ வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் . அத்துடன்   காத்திருந்த நோயாளிகள் சிலரிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

மா.சுப்பிரமணியன்

மருந்துப் பெட்டிகள் ஆம்புலன்சில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டித்தார். மருந்தாளுனர், ஓட்டுநர் உட்பட பணியில் இல்லாத பிற ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். நோயாளிகள் அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  மேலும், திசையன்விளையில் மருத்துவர்கள் வழக்கமாகவே தாமதமாக வருவதாகவும், இதனால் வேலைக்கு செல்லமுடியாமல் ஒருநாள் கூலியை இழக்க நேரிடுவதாகவும் கண்ணீர் விட்டு உருக்கத்துடன் கூறினர்.

மா.சுப்பிரமணியன்

இதனையடுத்து அமைச்சர் குறித்த நேரத்தில் பணிக்கு   வராத மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அத்துடன்  மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள்  உடனே தெரிந்துகொள்ளும் வகையில், பாம்பு கடி மற்றும் நாய் கடி மருந்து இருப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட  வேண்டும் என தமிழகத்தின் அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web