மரண வீடாக மாறிய திருமண வீடு... துரோகிகளாக மாறி நண்பர்களே கொலைச் செய்த கொடூரம்!
அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், மண்டபத்தில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் குழுமியிருந்தனர். திருமணத்திற்கு முந்தைய தினம் இரவு தம்பியை நண்பர்களே கொடூரமாக கொலைச் செய்துள்ள சம்பவம் கோயம்புத்தூரை அதிர செய்துள்ளது.

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவரது அண்ணன் ரங்கராஜ். ரங்கராஜூக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவரது தம்பி கோகுல், தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார். ஏற்கெனவே கோகுலுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே பணி செய்யும் இடத்தில் அதிக ஒலி எழுப்பி பாடல் வைப்பது குறித்து தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணனின் திருமணத்திற்காக நண்பர்களை அழைத்து மது விருந்து வைத்திருந்த நிலையில், பழைய முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, மதுபோதையில் இருந்த கோகுலை கோகுலுன் மது அருந்திய நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து மது அருந்தி விட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து கோகுலைக் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த கோகுல் ரத்தம் வெளியேற சிறிது தூரம் நடந்து தப்பிச் செல்ல முயன்று, அதிக ரத்தம் வெளியேறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், காலையில் மூத்த மகனுக்கு திருமணம் நடந்த நிலையில், அண்ணன் திருமணத்தில் தம்பி கோகுல் கிருஷ்ணன் எங்கே போனார்? போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கவலையடைந்த பெற்றோர், மூத்த மகனின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கையில், காணாமல் போன கோகுல் கிருஷ்ணன் குறித்த போலீசாரின் விசாரணையில், தம்பி கோகுல் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்து விசாரணையில் இறங்கிய போலீசார், கோகுலைக் கொலைச் செய்த அவரது நண்பர்களான நாகராஜ், பிரவீன்குமார், உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணனின் திருமணத்திற்கு வாழ்த்த குவிந்திருந்த உறவினர்கள், கோகுல் கொலைச் செய்யப்பட்ட செய்தி கேட்டு சோகத்தில் மூழ்கினர். திருமண வீடு, நெருங்கிய நண்பர்களாலேயே துக்க வீடாக மாறியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
