மனைவியின் கள்ளக்காதலன் தலையை வெட்டிய கணவன்...! கொடூரக்கொலை!

 
இசக்கியம்மாள்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை  கண்ணாடி குளம் கிராமத்தில் வசித்து வருபவர்  குண்டன் என்ற சுப்பிரமணியன். இவரது மனைவி இசக்கியம்மாள். மகன் வேலுச்சாமி . இசக்கியம்மாளுக்கும் இதே பகுதியில் வசித்து வரும்   துரைசாமி மகன் முருகனுக்கும்  பழக்கம் ஏற்பட்டு   நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதை மனைவி ஏற்காத நிலையில் இருவருக்கும் இடையிலான கள்ளக்காதல் தொடர்ந்தாக கூறப்படுகிறது.இதனால் கணவன் மனைவி சண்டை அதிகரித்தது.

கட்டையால் அடித்து கொலை

சமாளிக்க முடியாமல்   இசக்கியம்மாள் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கண்ணாடிகுளம் கிராமத்தில் இருந்து ருக்குமணியம்மாள்புரம் செல்லும் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கள்ளக்காதலன் முருகனிடம் வேலுச்சாமி சென்று என் மனைவி இசக்கியம்மாளுடன் தகாத உறவு இருப்பதாக கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த இளநீர்வெட்டும் அருவாளை எடுத்து முருகனின் தலையை திருவிழாக்களில் ஆடை வெட்டுவது போல ஒரே வெட்டாக தலையை வெட்டியுள்ளார்.  முருகனின் தலையை எடுத்து மனைவி ஊரான கயத்தாறு அருகே உள்ள புதுக்குடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலேயே தலையை கொண்டு சென்று மனைவியிடம் உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார் எனக் கூறியுள்ளார். 

போலீஸ்

இதில் அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார் வேலுச்சாமி கைது செய்து முருகனின் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியிடம் கள்ள உறவு வைத்திருந்த ஒருவரை  கொடூரமாக தலையை வெட்டிய சம்பவம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web