மனைவியை சராமாரியாக வெட்டிய கணவர்... பகீர் பிண்ணனி...!!

 
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர்   தஸ்தகீர்.   இவர் வெங்கடாசலபுரம் செக்போஸ்ட் அருகே வாடகையின் பேரில் ஜேசிபி வாகனங்கள் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். திடீரென அவருக்குச் சொந்தமான ஜேசிபி வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக தஸ்தகீருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், ஜேசிபி வாகனங்கள் பற்றி எரிவதைத் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இது குறித்து, தஸ்தகீர் சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜேசிபி வாகனங்களுக்கு யாரோ மர்மநபர் தீ வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை மேலும் தீவிரமாக மேற்கொண்டதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா என்பவர்தான் ஜேசிபி வாகனங்களுக்குத் தீவைத்தார் என்ற விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், ராஜாவைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. தஸ்தகீரின் சகோதரரான அஸ்கர் அலி (32), ஜேசிபி வாகன ஓட்டுநராக அவரிடம் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ஜெயா (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஆம்புலன்ஸ்

நாளடைவில் இந்த விவகாரத்தை அறிந்த கணவர் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று  இரவு வேலை தொடர்பாக ராஜா வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது மனைவி அஸ்கர் அலியும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜா அவருடைய மனைவி ஜெயாவை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளார்.  

இதில் படுகாயமடைந்த ஜெயா விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கிருந்து அஸ்கர் அலி தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து, பக்கத்து நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தஸ்தகீருக்குச் சொந்தமான 3 ஜேசிபி வாகனங்களையும் அவர் தீயிட்டுக் கொளுத்தியதும், விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவைக் கைதுசெய்த சாத்தூர் டவுன் போலீசார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web