கொடூரம்.... காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் !!

 
சாரம்மாள்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்  ஜான்சன். இவர்   தூய்மை பணியாளராக பணிபுரிந்து  வருகிறார்.  ஜான்சன் 5 மாதங்களாக சாரம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை   ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.  சாராம்மாள் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனை மறைத்து  ஜான்சனை புதிய திருமணம் செய்து கொண்டார்.

காதல் காதலி கொலை தூரோகம்

சில நாட்களுக்கு முன் தான் இந்த விபரம் ஜான்சனுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு, தகராறு ஏற்பட்டு வந்தது. 2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில்  ஆத்திரத்தில் ஜான்சன் சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை கோணிப்பையில் கட்டி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

சிறுவன் கைது

அக்கம்பக்கத்தினர்   போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோணிப்பையில் கட்டி இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   தலைமறைவாக இருந்த ஜான்சன் தானே  காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web