அதிர்ச்சி... மனைவியை கொன்று யமுனை ஆற்றில் வீசிய கொடூரம்!!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் சிக்ரி கிராமத்தில் வசித்து வருபவர் தர்மேந்திரா. இவர் கடந்த ஒரு வருடமாக பெண்ணுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 19ம் தேதி அந்த பெண்ணைக் காணவில்லை என அவரது தந்தை போலீஸில் புகார் செய்தார். அதே நாளில் இருந்து தர்மேந்திராவும் காணாமல் போயிருந்தார். இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தர்மேந்திராவைத் தேடி வந்தனர். நேற்று நள்ளிரவில் பிடிபட்ட தர்மேந்திராவிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை ஆகஸ்ட் 16ம் தேதி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறியதை கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரைக் கொலை செய்த பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி மனைவிக்கு உடல் நிலை சரியில்லை அவசரமாக போக வேண்டும் என வாடகை ஆட்டோவை அமர்த்தி அவளை யமுனை நதி ஓடும் மோகனா பாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் நம்பி தர்மேந்திராவையும், அவரது மனைவியையும் அழைத்துச் சென்றார்.
இதன் பிறகு அந்த பாலத்தில் இருந்து மனைவியின் உடலை யமுனை ஆற்றில் தர்மேந்திரா வீசிவிட்டதாகக் கூறினார். அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் விடுத்த செய்திக்குறிப்பில் " உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் வசித்து வரும் தர்மேந்திரா சில ஆண்டுகளுக்கு முன் ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத் வந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் குடும்பம் நடத்தினர். குடித்து விட்டு வந்து அடிக்கடி அந்த பெண்ணை தர்மேந்திரா அடித்து துன்புறுத்தி குடிபோதையில் அந்த பெண்ணைக் கொன்று யமுனை ஆற்றில் வீசியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்பெண்ணின் உடலைத் தேடும் பணி யமுனையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!