பயங்கரம்... காதல் மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்... !

 
தனலட்சுமி

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  பார்வதியாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பார்த்திபன்.  இவர் தனலட்சுமியை  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து முடிந்து   6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்  இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பார்த்திபன்  கறிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். தனலட்சுமி  பிரபல நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமியின் சித்தப்பா மகள்  தங்கை உயிரிழந்து அதற்கான சடங்குகள் காரியம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து  மனைவி தனலட்சுமிக்கும், பார்த்திபனுக்கும் இடையே  பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
தீயிட்டு எரித்து கொலை
 திடீரென வீட்டில் இருந்து தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டது.  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது  தீக்காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   தனலட்சுமியின் பெற்றோருக்கு பார்த்திபன் போன் செய்து தங்கள் மகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டார். உடனடியாக  அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டு   அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஆம்புலன்ஸ்


 தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து  தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், உறவினர்களும் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனே மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக  குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு  காரணமாக மனைவி பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில்  இருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web