கொடூரம்... மனைவியை 17 முறை சராமாரியாக குத்தி கொலை செய்த கணவன்!!

 
கற்பகம்

பொள்ளாச்சி தொப்பம்பட்டி புதுக்காலனியில் வசித்து வருபவர்   ஆறுமுகம் என்கிற டேவிட் . இவர்   பெயிண்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி கற்பகம்.   இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இவர்களுக்கு  3 குழந்தைகள்.  கடந்த 8 மாதங்களாக இருவருக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  

காதல் காதலி கொலை தூரோகம்

இதனால்   ஆறுமுகம் தனது மனைவியை பிரிந்து திருப்பூரில் உள்ள  தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக  ஆறுமுகம் பொள்ளாச்சி பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு வந்தார். அப்போது   தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து   கற்பகத்திடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஆறுமுகம் கூறினார். இதற்கு   கற்பகம் மறுப்பு தெரிவித்துவிட்டார்.  இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

சிறை

நேற்று பணி முடித்து தொப்பம்பட்டியில் உள்ள தனது மனைவி கற்பகத்தின் வீட்டிற்கு ஆறுமுகம் சென்றுள்ளார். அப்போதும்  வாக்குவாதம் தொடர்ந்தது.   ஆத்திரமடைந்த ஆறுமுகம் கத்தியால் கற்பகத்தின் வயிற்றுப் பகுதி, கழுத்து பகுதி என 17 இடங்களில் சராமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த கோரத்தாக்குதலில் நிலைகுலைந்த  கற்பகம் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற  காவல்துறையினர்   கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  தனிப்படை அமைத்து ஆறுமுகத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web