விரைவில் நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா... தீர்மானங்கள் நிறைவேற்றம்?!

 
நடிகர் சங்கம்

இன்று செப்டம்பர் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 950க்கும் அதிகமான நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் நிகழ்வை முன்னின்று நடத்தினர். 

கூட்டத்தின் தொடக்கத்தில் சமீபத்தில்  மறைந்த சரோஜாதேவி, ரோபோ சங்கர், மனோஜ், டில்லி கணேஷ் உட்பட  70 சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் வடிவேலு நடிகர் சங்க பொதுக்குழுவில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் தேசியவிருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்  ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

விஷால்

இதனையடுத்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் ” சமூக வலைதளங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதுாறாக பேசிய சிலர் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.  நடிகர் சங்க புதுக்கட்டட திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதாசாகேப் விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் மற்றும் தேசிய விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்” எனப் பேசினார். 

வடிவேலு

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், “பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும், இப்போது ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும். நடிகர் சங்க கட்ட பலரும் உதவி செய்து வருகிறார்கள். எந்த நடிகர், நடிகையிடம் இவ்வளவு பணம் கொடுங்க என்று கேட்க முடியாது. நாங்கள் ஆசிரியர்கள் அல்ல. அவர்களாக கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் பல முன்னணி நடிகர்கள் பணம் வாங்காமல் கலைநிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். அதுவே பெரிய உதவி’” எனப் பேசியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?