உடல் பருமனை கிண்டல் செய்த கணவன்.. ஆத்திரத்தில் தற்கொலைக்கு முயன்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்..!
உடல் பருமன் குறித்து கிண்டல் செய்த கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). அவர் டிராவல்ஸ் ஏஜென்ஸி வைத்து நடத்துகிறார். இவரது மனைவி துர்கா (26). இவர்களுக்கு அஷிதா, நித்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மணிகண்டன் மனைவி துர்காவின் உடல் பருமனை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துர்கா, "என்னை இப்படி கிண்டல் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன்" என மணிகண்டனிடம் கூறினார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டினார்.
துர்காவை சமாதானம் செய்துவிட்டு மணிகண்டன் தூங்குவதற்காக அவள் அறைக்கு சென்றான். துர்கா சமையலறைக்குச் சென்றபோது, கேஸ் அடுப்பில் இருந்து தீ திடீரென துர்காவின் உடலைத் தொட்டது. துர்கா வலியால் அலறினாள். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மணிகண்டன் தீயை அணைத்து சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து துர்காவுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 60% தீக்காயம் அடைந்த துர்காவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க