சோகம்.. கழுத்தை நெறித்த கடன் தொல்லை.. வெவ்வேறு இடத்தில் கணவன் - மனைவி தற்கொலை..!

 
விஜீஷ் - ராஜி

விஜீஷ் கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராஜி. இருவரும் கொல்லம் மாவட்டம் அவனீஸ்வரம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

உயிரிழந்த விஜீஷ், ராஜி தம்பதி

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஆவணீஸ்வரம் அருகே குன்னிக்கோடு பகுதியில் பெண் ஒருவர் திடீரென மினி பேருந்து முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்த உடைமைகளை பரிசோதனை செய்த போது, அது விஜீஷின் மனைவி 38 வயதான ராஜி என்பது தெரியவந்தது.

தகவலறிந்து விஜீஷின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடினர். இந்நிலையில், ஆயிரவல்லி வியூ பாயின்ட் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது தூக்கில் தொங்கியவரின் சட்டை பாக்கெட்டில் கடிதம் இருப்பது தெரிந்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்ததில், தூக்கிலிடப்பட்டது விஜீஷ் என்பது தெரியவந்தது.

குன்னிக்கோடு போலீஸார் விசாரணை

போலீசார் நடத்திய விசாரணையில், கடன் பிரச்னையால் விஜீஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதற்காக சம்பவ இடத்திற்கு வந்து ராஜியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போனில் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, கணவன் இறந்த அதே நேரத்தில் மினி பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web