அதிர்ச்சி.. 1 கோடி ரூபாய் பேரம்.. ரயிலில் கடத்தப்பட்ட 4.2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு மீட்பு..!
ரூ.1 கோடிக்கு சேலம், கோவை வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 4.2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். போலீசாரின் சோதனையை பார்த்து தப்பியோடிய மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் புகையிலை, கஞ்சா, கஞ்சா எண்ணெய், அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள், போதைப் பொருள்கள் போன்ற சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுகின்றன.
இதை முற்றிலும் தடுக்கவும், கடத்தல் கும்பலை கைது செய்யவும் சேலம் கோட்ட ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் தொடர்ந்து ரயில்களில் சோதனை நடத்தினர். இந்த வகையில் நேற்று மாலை புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626) ரயிலில் ஏறி சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு, கோவை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.
சேலத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்துவிட்டு கோவை வந்தடைந்தது ரயில். 1A பிளாட்பாரத்தில் ரயில் நின்றதும், முன்பதிவு செய்யப்படாத பின்புற பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது கழிவறை அருகே ஒரு பை கிடந்தது. பைக்குள் ஏதோ நெளிவது போல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆர்பிஎப் போலீசார் பையை எடுத்து திறந்து பார்த்தனர்.
அதன் உள்ளே ஒரு பெரிய மண்ணுளி பாம்பு இருந்தது. அதை மோசடி கும்பல் கேரளாவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.உடனே அந்த பாம்பை கைப்பற்றி பெட்டியில் இருந்த பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தி அதை கடத்தியவர்களை கண்டுபிடித்தனர். அதில், போலீசார் சோதனை நடத்துவதை பார்த்த மோசடி கும்பல், பையை கழிப்பறை அருகே வைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
அதன்பின், சிக்கிய பாம்பை கோவை ஆர்பிஎப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாம்பு 4.2 அடி நீளமும் 5 கிலோ எடையும் இருந்தது. பாம்பை கேரளாவுக்கு கொண்டு சென்று ரூ.1 கோடிக்கு மேல் விற்க கும்பல் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. சந்தேக நபர்களில் சிலரை RPF போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே 4.2 அடி நீளமுள்ள பாம்பை ஆர்பிஎப் போலீசார் கோவை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தனி வழக்கு பதிவு செய்து இந்த பாம்பை கடத்தி வந்த மோசடி நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஈரோட்டில் இருந்து ஆந்திரா அல்லது சேலத்தில் இருந்து இந்த பாம்பை கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன்படி கோவை வனத்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ரயிலில் பாம்பு கடத்தப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க