வீட்டிலேயே புதைக்கப்பட்ட பெண் குழந்தை சிசு.. தோண்டி எடுத்து போலீசார் தீவிர விசாரணை..!

 
முருகவேல் - தீபா

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பில்லக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ளனர். தீபா 3வது முறையாக கர்ப்பமானார். கடந்த மாதம் 30ம் தேதி வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து தீபா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

133 - வேடசந்தூர் | 133 - வேடசந்தூர் - hindutamil.in

இந்நிலையில் கடந்த 4ம் தேதி சிசு இறந்தது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை பில்லக்காபட்டிக்கு கொண்டு வந்து முருகவேல் வீட்டின் அருகே புதைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்.கோம்பை கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வேடசந்தூர்  வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

குழந்தை உடல் புதைக்கப்பட்ட இடம்


பின்னர் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததா? அல்லது பெற்றோர்களே கொன்று புதைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிறந்து 5 நாட்களிலேயே பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web