பைக் மீது மினி லாரி மோதி கோர விபத்து.. தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!

 
மதுராந்தகம் விபத்து

மதுராந்தகம் அருகே  இருசக்கர வாகனத்தின் மீது  மினி லாரி மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா வெளியபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் என்பவரது மனைவி வசந்தா. இவர் விடியற்காலை  தனது மகன் கார்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது, எதிரே சோத்துப்பாக்கத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  கார்த்திக் அவரது தாயார் வசந்தா ஆகியோர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Cheyyur, Chengalpattu : செய்யூர்: மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில்  பள்ளிக்கு சென்ற அரசு பள்ளி மாணவன் மாயம் | Public App

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web