பெரும் சோகம்.. திருமணமான அடுத்த நாளே மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதுப்பெண் பலி!

 
சுதா

 திருமணமான அடுத்த நாளே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் சுதா (27), என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

Edappadi, Salem : எடப்பாடி: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளராக வேண்டி  இன்று நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூசை செய்த அதிமுக நிர்வாகிகள் ...

இந்த நிலையில் நேற்று மதியம் சுதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் சின்ன பொண்ணு என்பவர் சுதாவை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது வழியிலேயே சுதா மயங்கினார். இதையடுத்து அவரது தாயார் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சுதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது சுதா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web