இஸ்ரேல் ஹமாஸ் போர் முழுமையாக முடிவுக்கு வந்தது... ட்ரம்ப் திட்டவட்டம்!

 
ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான 2 வருட கால போருக்கு இன்று இறுதி வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக, 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்துகொண்டுள்ளனர்.

ட்ரம்ப்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பில் டிரம்ப் கலந்து, நாடாளுமன்றத்திற்கு ஒரே வாகனத்தில் சென்றார். இங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் போர் அதிகாரப்பூர்வமாக முடிந்ததா என்ற கேள்விக்கு வெறுமனே “ஆம்” என்று பதிலளித்தார். போர் நிறுத்தத்தின் உடனடிக் செயலாக, ஹமாஸ் வசம் உள்ள 7 இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கப்பட்டு, மீதமுள்ள 13 பேரும் விரைவில் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹாசெம் காசெம் டிரம்பின் கருத்தை வரவேற்றார். காஸா மீது இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்காததை உறுதி செய்ய, மத்தியஸ்தர்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தம் கிழக்கு மத்தியகிழக்கில் அமைதி நிலையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?