நாளை திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்... கோவிலில் குவிய தொடங்கிய பக்தர்கள்!

 
திருச்செந்தூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவமாக காட்சி தருவதாக நம்பிக்கை உள்ளது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார நிகழ்வை காண வருடந்தோறும் திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

திருச்செந்தூர் முருகன்

இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை (அக்டோபர் 22) தொடங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் ஆறு நாட்களில் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறும். அதன் மறுநாள் 28ஆம் தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.

திருச்செந்தூர்

சூரசம்ஹார நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில் வளாகத்திலும் சுற்றுப்புறங்களிலும் பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழா நாட்களில் விரதம் நோற்கும் பக்தர்களுக்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தலத்தில் உள்ள நான்கு உற்சவர்களில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்தில் சூரனை அழிக்கும் திருக்காட்சி அளிப்பார், குமரவிடங்கர் மாப்பிள்ளை சுவாமியாக திருக்கல்யாண நாளில் எழுந்தருளுவார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!