ஆபத்தை உணராமல் பயணிக்கும் இளைஞர்கள்.. பேருந்து வசதி இல்லாததால் அவதிப்படுவதாக வேதனை..!

 
ஆலங்காயம்

கூடுதல் பேருந்து வசதி இல்லாததால் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வாரநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த வழித்தடத்தில் ஏராளமானோர் செல்வதால் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எப்போதும் நிரம்பி வழிகின்றன.

வாணியம்பாடி: ஆலங்காயம் பகுதியில் இன்று ஒரே நாளில் 2 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்தது மாவட்ட நிர்வாகம்.|Inshorts

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்துக்கு தனியார் பஸ்சில் ஏராளமான பயணிகள் சென்றனர். இதனால் இடமில்லாமல் இளைஞர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பின் ஏணியிலும் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை பார்க்கும் பொதுமக்கள், பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்துகள்  வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,  கூடுதல் பேருந்து இல்லாததால் நாங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web