”கடைசி விவசாயி” பட நடிகை கட்டையால் அடித்து கொலை... பரபரப்பு... !

 
காசம்மாள்

 தேசிய விருது பெற்ற படம் கடைசி விவசாயி. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைப்படத்தில் நடித்தவர் உசிலம்பட்டி காசம்மாள். இவர்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  ஆனையூர்   பால்சாமி மனைவி.   விவசாய கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டி வரும் காசம்மாள்   'கடைசி விவசாயி' திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நாமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள்.

காசம்மாள்

இதில்  மூத்த மகன் நாமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த 15 ஆண்டுகளாகத் தாயுடன் வசித்து வருகிறார். எந்நேரமும்  மதுபோதையில் சுற்றித் திரியும் இவர்  அடிக்கடி குடிக்க தாயிடம் பணம் கேட்பது வழக்கம். தராத சமயங்களில்   காசம்மாளுடன் தகராறில் ஈடுபடுவதும் உண்டு.  இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு  வீட்டுக்கு சென்ற நாமகோடி  தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல குடிக்க  பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணம் தர மறுத்த தாய் காசம்மாளை கட்டையால் தாக்கியுள்ளார். திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த காசம்மாளுக்கு   தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது . இதனால் துடிதுடித்து  காசம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காசம்மாள்

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த காசம்மாளைக் கண்டு  போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த  காவல்துறையினர்  காசம்மாளின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு   உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பெற்ற தாயை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் நாமகோடியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்  உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web