காவல்துறையின் ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை - தவெக வக்கீல் பேட்டி!
கரூரில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் விதித்திருந்த ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை என்று தவெக வக்கீல் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு விஜய் சென்னை திரும்பிய நிலையில், சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வக்கீல் அறிவழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட குளறுபடியால் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தி தலைவர் விஜய்யின் இதயத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. விஜய் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கக்கூடியவர். இந்தக் கோரமான சம்பவம் அவர் மனதை பலமாக பாதித்திருக்கிறது. விஜய் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.

அடுத்த வாரம் பரப்புரை மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து விஜய் தெரிவிப்பார். காவல்துறையின் நிபந்தனைகளை தவெக பின்பற்றி இருக்கிறது. ஒரு நிபந்தனையை கூட மீறவில்லை” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
