வேகத்தடையால் பறிபோன இளைஞரின் உயிர்.. பகீர் சிசிடிவி காட்சிகள்!!

 
சந்திரகாந்த்

கோவை சூலூர் பகுதியில் வசித்து வருபவர்  சந்திரகாந்த். இவர் சேரன் மாநகரில்  டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்துள்ளார்.  இவர் வீட்டுக்கு செல்லும் வழியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் மாணவ , மாணவிகள் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் வேகத்தடை உடனடியாக அமைக்கப்பட்டது.அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை. 



இதனையடுத்து நள்ளிரவு  12 மணிக்கு  கடையை மூடிவிட்டு, சந்திரகாந்த் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  வழக்கமான பாதை தான் , சாலையும் காலியாக இருந்தது. வேகத்தடை அமைக்கப்பட்டது தெரியாமல் வழக்கம் போல் வேகமாக வந்தார்.   புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் உயிரிழந்தார்.

வேகத்தடை


 பள்ளி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட  வேகத்தடையில்   வெள்ளை நிற கோடு  எதுவும் இல்லாமல் இருந்ததால்  இரவு நேரத்தில் வேகத் தடை இருப்பது தெரியாமல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதனையடுத்து காவல்துறையினர் இரவோடு இரவாக, வேகத்தடை இருப்பதற்கான வெள்ளை கோடுகளை போட்டனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web