அதிக ஒலி எழுப்பிய தனியார் மருத்துவமனை.. ரூ.37 லட்சத்தை அபராதமாக விதித்த நீதிமன்றம்!

 
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் 10வது மாடியில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் புதிய மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இரவு நேரத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளால் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ​​கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றும், உரிய கட்டணம் செலுத்தினால் திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணியைத் தொடர இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​கட்டுமானப் பணிகள் நடப்பதாக மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது.

திட்ட அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்த அதிகாரிகளின் கடமை தவறியதைக் கண்டித்த நீதிபதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகத்துக்கு தலா ரூ.5 லட்சமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதித்தனர். மேலும் , எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது ரூ.25 லட்சம் அபராதம் விதித்தனர்.

மொத்தமாக 37 லட்சம் அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். திட்ட அனுமதியை தொடர்ந்து, கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க, சி.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web