குழந்தைகளை கணக்கில்லாமல் சீரழித்து இணையத்தில் வெளியிட்ட நபர்.. காட்டிக்கொடுத்த கூகுள்!

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் ராஜா (36). இவர் எம்.காம் பட்டதாரி. இவர் பிஎச்டி படித்து வந்த போது குழந்தைகளை பலாத்காரம் செய்து அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், கூகுள் நிறுவனம் அவருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிய நிலையில், தான் செய்யும் குற்றங்களை மறைக்க தனது போனில் ஏதோ அப்டேட் செய்துள்ளார்.
இருப்பினும், கூகுள் அவரது குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.அவர்களில் 4 பேர் 10 வயதுக்குட்பட்டவர்கள். அதன் பிறகு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள பலரை ஜேம்ஸ் பலாத்காரம் செய்து அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இணையதளங்களில் விற்பனை செய்துள்ளார். இவரால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இப்படியே விற்பனை செய்து வந்துள்ளார்.அதன் பிறகு பலாத்காரம் செய்தது மட்டுமின்றி சில சிறுவர், சிறுமிகளை மிரட்டி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட வைத்து வீடியோவும் எடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்ட அவர், இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆனால், இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜேம்ஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் ரூ.6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா