பரபரப்பு... ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு சென்றவர் வெட்டிக் கொலை... !!

 
ராமஜெயம்

தமிழகத்தில் திமுக முதன்மை செயலாளராக இருந்து வருபவர் அமைச்சர்  கே.என்.நேரு. இவரின் சகோதரர்   கே.என்.ரமஜெயம்  2012 மார்ச் 29ம் தேதி  அதிகாலையில் நடைபயிற்சியின் போது  அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல்   முட்புதரில், கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் இந்தக் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   கொலை நடந்து 13 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இந்த கொலை தொடர்பாக ஒருவர் கூட  கைது செய்யப்படவில்லை. ஆனால் இதுவரை இந்த கொலை சம்பந்தமாக 1000க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  

நேரு


கடந்த 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது .  சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளைப் பிடித்து   உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் வள்ளுவன் நகரில்  பிரபாகரன் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தை நடத்தி வந்த பிரபாகரன் மீது 10க்கும்  மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருட்டு வாகனங்களை வாங்கி  மாற்றி விற்பதில் வல்லவர் என அவர் மீது புகார்கள் இருந்தன.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

ராமஜெயம்

இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு  திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஆஜராகி பிரபாகரன் கையெழுத்திட்டார்  இதன் பிறகு   தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், இரு சக்கர வாகனங்களில் வந்த 4 முகமூடி நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இவரிடம் டிசம்பர் 9ம் தேதி  ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெர்ஷா ரக கார் குறித்து   பிரபாகரனிடம்  விசாரணை நடத்தியதாக தெரிகிறது.  இது குறித்த மேல் விசாரணைக்கு நாளை  மீண்டும் ஆஜராக இருந்த நிலையில் பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட  சம்பவம் திருச்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web