நெகிழ்ச்சி வீடியோ... குப்பை பொறுக்குபவரை வீட்டுக்கு அழைத்து சென்று வேலை வாங்கி கொடுத்த அமைச்சர்!

 
மா.சுப்பிரமணியன
 

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஜூலை 22ம் தேதி திங்கட்கிழமை  கிண்டியில் காலை நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது தெருவோரம் காகிதம் எடுத்து பிழைப்பவர் திருச்சியை சேர்ந்த ராஜா அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தார். அவரிடம் பேசத் தொடங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராஜாவை அருகில் அழைத்து விசாரித்தார். ராஜா அமைச்சரிடம் தனது ஏழ்மை நிலையை குறித்து பேசியுள்ளார்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருடைய வாகனத்தில்  தம்முடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யச் சொன்னார்.

அங்கு உடனடியாக  மருத்துவமனையிலேயே தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளர் பணியை வழங்கி உதவி செய்துள்ளார்.
இது குறித்து அமைச்சர்  மா.சுப்பிரமணியன், “இன்று காலை நடைபயிற்சி முடித்து வந்து கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பேப்பர் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சேகரித்துக்கொண்டிருந்தார். அவர் நம்மை அடையாளம் கண்டு வணக்கம் சொன்னார்.

அவர் குறித்து விசாரித்ததில் திருச்சியை சார்ந்த ராஜா என்பதும்,அவர் தினந்தோறும் இப்பணியை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் அரைகுறையாக உண்டு சாலையோரங்களில் படுத்துறங்கும் ஆதரவற்ற தோழர் என்பதும் தெரியவந்தது.அவரை நமது தொழிலாளர் குடியிருப்பு இல்லத்தில் குளிக்கவைத்து மாற்று ஆடைகளை தந்து உடுக்கவும் வைத்து கலைஞர் நூற்றாண்டு உயற்சிறப்பு மருத்துவமனையில் அவரின் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளும்,வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணியும்  வழங்க நடவடிகை எடுக்கப்பட்டது.” என பதிவிட்டுள்ளார்.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web