புள்ளைங்க வீட்டை விட்டு துரத்திட்டாங்க... கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறிய தாய்!!

 
திலகவதி

 
ஈரோடு மாவட்டம், திருநகர் காலனியில் வசித்து வருபவர்  திலகவதி. இவருக்கு 2 மகன்கள் . இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரு மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.   இரு மகன்களும் தாயை சரிவர கவனிக்காததால் ஆத்திரமடைந்த திலகவதி, இருவரையும் வீட்டை காலிசெய்ய அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் அந்த வீட்டை  வாடகைக்குவிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டுள்ளார்.முதல் மகன் வீட்டை காலி செய்த நிலையில்2வது மகன்  செந்தில், வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

திலகவதி

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் திலகவதி, மூத்த மகன் கார்த்திக் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது  திலகவதி வசித்த வீட்டின் கதவில் மேலும் ஒரு பூட்டு போடப்பட்டு இருந்தது.  இது குறித்து மகன் செந்திலிடம் கேட்டதற்கு “இனி இந்த வீடு என்னுடையது. அங்கிருந்து வெளியேறிடுங்க” என கூறியுள்ளார்.   திலகவதி செல்ல இடமின்றி தவித்துள்ளார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகம்

இதனால், தான் இருந்த வீட்டை இளைய மகன் செந்தில் மற்றும் அவருடைய மனைவி சரண்யா ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர் என   காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் திலகவதி புகார் அளித்துள்ளார்.இதுவரை கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   தங்குவதற்கு  வீடில்லாமல் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் திலகவதி தங்கி வருகிறார். உடனடியாக மாவட்ட ஆட்சியர்   உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தரும்படி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிகழ்வு கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web