இளம்பெண் மர்ம மரணம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.. மாமியார், கணவர் உட்பட 4பேர் அதிரடியாக கைது!
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவி நிலாபர் நிஷா. தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், யாஷிகா பர்வீன் (22) என்பவருக்கும், உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின், ஜபருல்லா தம்பதியின் மகன் இம்ரானுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, தனது மாமியார் மற்றும் கணவர் தன்னை துன்புறுத்துவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், ஜூன் 24ம் தேதி, யாஷிகா பர்வீனுக்கு வலிப்பு ஏற்பட்டு, சமையல் அறையில் கிடப்பதாக பெண்ணின் தாயாருக்கு தகவல் கிடைத்தது.பின்னர் அவர் உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு யாஷிகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் கடந்த வாரம் வந்தது. பெண்ணின் கழுத்து, தோள்பட்டை மற்றும் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து யாஷிகா பர்வீனின் மாமியார் யாஸ்மின் (49), அவரது மாமனார் கலிப் (56), அவரது கணவர் இம்ரான் (30), அவரது கணவரின் தம்பி முக்தர் (23) ஆகிய 4 பேரை உதகை டி3 காவல் துறையினர் கைது செய்தனர்.அதில், யாஷிகாவை தொடர்ந்து தாக்கி துன்புறுத்திய இந்த நான்கு பேரும் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!