ஆட்டோ டிரைவரை சராமாரியாக வெட்டி சாய்த்த மர்ம கும்பல்!! தொடரும் கொடூரக்கொலைகள்!!

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை . இவருக்கு வயது 65. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். நேற்று விஜயகுமார் மேலச்செவல் அருகே வெள்ள நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மகும்பல் ஒன்று விஜயகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இச்சம்பவத்தால் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முன்னீர்பள்ளம் போலீசார், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொலை நடந்த பகுதியில் பதட்டத்தை தணிக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பாஜக பிரமுகர் கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!