மாயமான ஆசிரியை விவகாரம்.. 3 மாதங்களுக்கு பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

 
வெங்கடேசன் - தீபா

பெரம்பலூர் அருகே ஆசிரியர் காணாமல் போன வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆசிரியர் சென்னையில் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் அருகே குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவர் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வேப்பந்தட்டையைச் சேர்ந்த பொறியாளரான பாலமுருகன் மனைவி தீபா (42), அதே பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இருவருக்கும் தகாத உறவும், பணப் பரிமாற்றமும் இருந்ததாகத் தெரிகிறது.வழக்கம்போல் நவம்பர் 15ம் தேதி பள்ளிக்கு சென்ற இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. தீபா மாற்றுத்திறனாளி என்பதால், தினமும் பள்ளிக்கு காரில் சென்று வந்தார்.

வீடு திரும்பாத கணவரைக் கண்டுபிடிக்கக் கோரி ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸாரும், பொறியாளர் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீஸாரும்  தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கோவையில் நவம்பர் 29ம் தேதி தீபாவின் கார் மீட்கப்பட்டது.அதில் தீபாவின் தாலி, செல்போன், ஏடிஎம் கார்டுகள், ரத்தக்கறை படிந்த சுத்தி, அரிவாள் ஆகியவை சிக்கியதால், ஆசிரியையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

ஆசிரியர் வெங்கடேசனை 5 தனிப்படையினர் பல ஊர்களில் தேடினர். ஆனால், கடந்த 85 நாட்களாக வெங்கடேசன் போலீசார் கண்ணில் சிக்கவில்லை. இதனிடையே, இந்த விவகாரத்தில் பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்.எஸ்.ஐ முகமது ஜியாவுதீன் ஆகியோர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிக்கு உதவியதாக வெங்கடேசனின் மனைவி காயத்திரி, மைத்துனர் பிரபு மற்றும் உறவினர் ராஜா ஆகியோரும் டிசம்பர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த ஆசிரியர் வெங்கடேசனை போலீசார் நேற்று கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

வெங்கடேசன்

அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் வர்த்தகத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததோடு, அவ்வப்போது தீபாவிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். தீபா பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், அவரை அழைத்துச் சென்று கொன்று உடலை எரித்ததாக அவர் கூறியுள்ளார்.கொலை நடந்ததாகக் கூறப்படும் வி.களத்தூர் அருகேயுள்ள முருக்கன்குடி, கீழப்புலியூர் பகுதிக்கும், உடல் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் புதுகை மாவட்டம் ஆகிய பகுதிக்கும் வெங்கடேசனை அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web