ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த டிவிஸ்ட்.. பிரபல ரவுடி மாட்டு ராஜா அதிரடியாக கைது!

 
மாட்டுராஜா

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய ரவுடிகளான சம்பவம் செந்தில், சீசிங் ராஜா, புதூர் அப்பு ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், ரவுடி புதூர் அப்புவின் கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜா பெங்களூருவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்

பட்டினம்பாக்கத்தில் பணம் வசூல் மற்றும் மிரட்டல் வழக்கில் ரவுடி மாட்டு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜா மீது 2011-ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கு, கோடம்பாக்கம் கொலை வழக்கு உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மாட்டு ராஜா மற்றும் புதூர் அப்பு ஆகியோர் மறைந்த ரவுடி மயிலை சிவக்குமாரின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது. ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளி என்பதால், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என மாட்டு ராஜாவிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

மேலும், புதூர் அப்புவின் இருப்பிடம் குறித்து மாட்டுராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதூர் அப்பு மாட்டுராஜாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அப்புவின் பெயரை மாட்டுராஜா கையில் பச்சை குத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ரவுடி புதூர் அப்புவிடம் விசாரணை நடத்திய பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலையில் மாட்டுராஜாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவுடி மாட்டுராஜாவை பட்டினம்பாக்கம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web